இறைவனுக்கு அனுப்புங்கள்

மகிழ்ச்சிப் பெறுவதற்குரிய மிகச்சிறந்த வழி இறைவனையேத் தலைவனாகவும் வழிகாட்டியாகவும் கொள்வதுதான். அதற்குப்பின் அவர் உமது இதயத்திலிருந்தே வழிகாட்டிக் காப்பாற்றுவார். ஒரு சமயம் சிவாஜி, தானியங்கள், துணிமணிகள், இனிப்புகள், பாத்திரங்கள் முதலியவற்றைப் பெருமளவில் தனது குருவான சமர்த்தராமதாசாரிடம் கொடுத்துவிட்டு வரும்படி தனது அரசவை சேவகர்கள் சிலரை அனுப்பிவைத்தார்.

“யாருக்காக? எதற்காக இவற்றைக் கொண்டுவந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார் ராமதாசர். “உங்களுக்காகத்தான். உங்களுக்கு உதவ யாருமில்லையல்லவா? அதனால் தான்”, என்றனர் வந்தவர்கள். ராமதாசர் சிரித்துக் கொண்டே, எனக்குரிய அனைத்தும் என்னிடம் பெரும் அளவில் உள்ளது.

இறைவன் ஒருவரைத்தவிர யாருமே எனக்குரியதை வழங்கமுடியாது. இவை அனைத்தையும் இறைவனுக்கே அனுப்பிவிடும்படி சிவாஜியிடம் கூறுங்கள்” என்று பதிலளித்தார்.

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
₹0.00
0