அனில் குமார்: சுவாமி! கடவுளின் கருணையைப் பெற என்ன செய்யவேண்டும்?

பகவான்: பக்தியைத் தவிர வேறு வழியில்லை. உன் செல்வம், படிப்பு, அதிகாரம், தோற்றப்பொலிவு இவையெல்லாம் கடவுளை மகிழ்விக்காது. உன் பக்தியைமட்டுமே கடவுள் பார்க்கிறார். ராமாயணத்தில் குஹனைத் தெரியுமல்லவா? ராமரை மகிழ்விக்க அவன் என்ன படித்திருந்தான்? அவன் படிப்பறிவற்றவன். தீவிர ராம பக்தையானRead More

அனில் குமார்: சுவாமி! தெய்வீகத்தை அலசி ஆராய முடியுமா? அதை அறிவினால் அறியமுடியுமா?

பகவான்: உலகத்தின் எல்லா அனுபவங்களும் காலம், இடம் என்ற வரையறைகளுக்கு உட்பட்டவை. புறவுலகில் உள்ளவற்றை அனுபவிக்க உனது புலன்கள் உதவுகின்றன. அறிவியலும் தொழில்நுட்பமும் ஐம்பூதங்களை ஆராய்ந்து, அவற்றை வெவ்வேறு வகையில் சேர்த்தும் பிரித்தும், மனிதன் வசதியாக வாழ்வதற்குச் சிலவகை சுக, சௌகரியங்களைRead More

அனில் குமார்: சுவாமி! எல்லோரிலும் தெய்வீகம் இருக்கிறதென்று சொல்கிறீர்கள். நாம் பிறப்பதற்கு முன் அது எங்கே இருந்தது? மரணத்துக்குப் பின் அது இருக்கிறதா?

பகவான்: தெய்வீகம் உள்ளது. தெய்வீகம் அழிவற்றது, தூயது, களங்கமற்றது. அதற்குப் பிறப்போ இறப்போ கிடையாது. அது நிரந்தரமானது, நிலையானது. காலத்துக்கும் இடத்துக்கும் அப்பாற்பட்டது. பௌதீக விதிகள் அனைத்தையும் கடந்தது தெய்வீகம். உங்கள் கேள்வி இதுதான்: நீங்கள் பிறக்குமுன் தெய்வீகம் எங்கே இருந்தது,Read More

அனில் குமார்: சுவாமி! ஒரே தெய்வீகம்தான் எல்லோரிலும் இருக்கிறதென்னும்போது, எதனால் வேற்றுமைகள் நிலவுகின்றன? தெய்வீகம் அதேதான் என்னும்போது, நாம் ஏன் ஒருவருக்கொருவர் மாறுபட்டு இருக்கிறோம்?

பகவான்: “ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்மா” (இரண்டாவது இல்லாத ஒன்றே பிரம்மம்) என்கிறது சாஸ்திரம். அப்படியானால் பன்மை, வேவ்வேறானவை, வேறுபாடுகள் போன்றவை எப்படி வந்தன? இதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம். மின்சாரம் அதேதான் என்றாலும் வேவ்வேறு பல்புகளின் வோல்டேஜ் மாறுபடுகிறதல்லவா? A bulbRead More

அனில் குமார்: சுவாமி, சாகார (உருவமுள்ள) கடவுளை வழிபடுதல், நிராகார (உருவமற்ற) கடவுளை வழிபடுதல் இவ்விரண்டில் எது மேலானது?

பகவான்: என் கருத்துப்படி இரண்டுமே சமமானவைதாம். இரண்டில் எதுவும் மற்றதைவிட உயர்ந்ததல்ல. இப்போது நீ கோயம்புத்தூரில் இருக்கிறாய். இங்கே நிலம் எல்லா இடத்திலும் சமதளமாக இருக்கிறது; யாரும் அதைச் சமப்படுத்தவில்லை. இப்படி இந்த நிலத்தை யாரும் செய்யவில்லை. இது அடிப்படையில் கோயம்புத்தூரின்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
₹0.00
0