பசு

பசு ஒன்றை வாங்க, கிராமச் சந்தைக்குச் சென்றாள் ஒருத்தி. விற்பனைக்காக நீண்ட வரிசையில் நின்றிருந்த பசுக்களை ஒவ்வொன்றாகப் பார்த்தாள். அவள் விரும்பிய வண்ணம் பசு அமையவில்லை. ஏனெனில் அவள், கொம்பில்லாத சாதுவான, பெண் கன்று உடைய, குறைவாகப் புல் தின்னக்கூடிய, அதிகமாகப் பால் கறக்கக்கூடிய, நிறைய சாணம் போடக்கூடிய பசுவை விரும்பினாள். அத்துடன் அவளுடைய குடிசையை மெழுகக்கூடிய சாணம் கரும்பச்சை நிறத்திலிருக்க வேண்டுமென்றும், அதனுடைய தோல் தவுட்டு நிறத்திலிருக்க வேண்டுமென்றும் விரும்பினாள்.

இப்படிப்பட்ட பசு எப்படி கிடைக்கும்? அவள் ஏமாற்றத்துடன் திரும்பியதில் வியப்பில்லையல்லவா?

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
₹0.00
0